பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடசேரி சுடுகாட்டு பகுதியில் வடசேரி ஒண்டிவீரன் கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 50), காந்திநகர் பகுதியை சேர்ந்த கேசவன் (45), காவல்காரம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த வெள்ளிமலை (31), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31), நவலூர் குட்டப்பட்டை சேர்ந்த வடிவேல் (35) ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.