மாநில அளவிலான கலைவிழா போட்டிக்கு 501 மாணவ-மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான கலைவிழா போட்டிக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 501 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-12-27 19:06 GMT

மாநில அளவிலான கலைவிழா போட்டிக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 501 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார்.

கலைத்திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை விழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 51 மாணவ-மாணவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்வி மட்டுமன்றி, மாணவர்களின் தனித்திறன்களையும் வெளிக்கொணரும் வகையில், கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன,

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே கவின்கலை, நுண்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன், இசைச்சங்கமம், கருவி இசை (தோல்கருவி), கருவி இசை - துணை காற்றுக்கருவி, கருவி இசை - தந்திக் கருவிகள் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 7 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்றது.

501 பேர் தேர்வு

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார போட்டிகளில் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 68 பள்ளிகளைச் சார்ந்த 501 மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், உதவி திட்ட அலுவலர் சீத்தாலெட்சுமி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்