காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல்

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-21 09:42 GMT

காஞ்சீபுரம் நகரில் முறையான ஆவணங்கள் இன்றியும், அதிக கட்டணம் வசூல் செய்தும் ஆட்டோக்கள் செயல்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தொடர் புகார் வந்தது.

இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து துறை மற்றும் போலீசார் இணைந்து காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், மூங்கில் மண்டபம், ஓரிக்கை உள்ளிட்ட பல பகுதிகளில் செல்லும் ஆட்டோக்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முறையான அரசு பதிவு ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

அபராதம் செலுத்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகைப்புரிந்த ஆட்டோ டிரைவர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் விதிமுறைகள் பின்பற்றும் முறை, விதிமுறை மீறினால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுறுத்தினார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஆட்டோ டிரைவர்கள் ஈடுபட்டால் அபராதத்துடன் சேர்த்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்