56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-11-16 15:58 GMT

கோப்புப்படம் 

கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து 56 உதவிப் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அவர்களை பணி நீக்கம் செய்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிங்காரவேல், ஆட்சி மன்றக் குழு முடிவின்படியும், உயர்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படியும் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் 18 பேருக்கும், வெளிக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கும் உத்தரவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்