2,704 பயனாளிகளுக்கு ரூ.58 கோடி கடன் உதவி
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2,704 பயனாளிகளுக்கு ரூ.58 கோடி கடன் உதவியை கலெக்டர் சமீரன் வழங்கினார்;
கோவை
திருச்சியில் நடந்த அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடன் உதவிகளை வழங்கினார்.
இதையொட்டி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு வங்கி கடனுதவியை கலெக்டர் சமீரன் வழங்கினார்.
இதில் 388 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43 கோடியே 45 லட்சம் வங்கி கடன், 21 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.7 கோடியே 62 லட்சம் வங்கிக்கடன், 5 சுய உதவிக்குழுக்க ளுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வங்கி கடன்,
5 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் தனிநபர் தொழில் வங்கி கடன், 355 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6 கோடியே 16 லட்சம் தொழில் உதவி கடன், 5 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டது.
மேலும் 89 சுய உதவிக்குழுக்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் இணை மானியம், 2 உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.18 லட்சம் தொடக்க நிதி,
7 சுய உதவிக்குழுக் களுக்கு ரூ.6 லட்சம் சமுதாய திறன் பள்ளிகள் அமைக்க நிதி உதவி, 10 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.64 ஆயிரம் சமுதாய பண்ணை பள்ளிகள் அமைக்க என மொத்தமாக 893 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2,704 பயனாளிகளுக்கு ரூ.58 கோடியே 44 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.
விழாவில் மகளிர் திட்ட இயக்குனா் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Image1 File Name : 14747321.jpg
----
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore