கோவையில் 6 குளங்களை காணவில்லை

கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும், கோவையில் 6 குளங்களை காணவில்லை என்றும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.;

Update:2023-03-25 00:15 IST

கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும், கோவையில் 6 குளங்களை காணவில்லை என்றும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

உலர்களம் வேண்டும்

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம்:-

பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் ஜாதிக்காய்களை உலர வைக்க போதிய உலர்களம் இல்லை. எனவே உலர்களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பொள்ளாச்சியில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

கலெக்டர் கிராந்திகுமார்:- மேற்கு புறவழிச்சாலைக்கு 5 கிராமங் களில் நிலம் கையகப்படுத்த வேண்டும். தற்போது 3 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தப் பட்டதும் புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்படும் என்றார்.

6 குளங்களை காணவில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி :-

கோவை உக்கடத்தில் இருந்து செட்டிபாளையம் வரை தலா 90 ஏக்கர் கொண்ட 6 குளங்கள் இருந்தன. தற்போது அந்த குளங்க ளை காணவில்லை. ஆனால் அந்த குளங்களின் மதகு பகுதி மட்டும் இன்னும் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வாகனங்களில் எடுத்து கேரளாவுக்கு கடத்தப் பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்றார். உடனே விவசாயிகள் எழுந்து நின்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

கனிம வளங்கள் கடத்தல்

கலெக்டர் கிராந்திகுமார்: இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை என்று நீங்கள் புகார் கூறுவதால், அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

சாதி, மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி:-

குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் குவாரிகள் நடத்த அனுமதி வழங்க கூடாது. ஆனால் கிணத்துக்கடவு பகுதியில் குடியிருப் புக்கு மிக அருகேயே குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இரவு நேரத்திலும் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தடையின்மை சான்று

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரியசாமி :-

கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிய விவசாயிகள், அந்த கடனை முறையாக திரும்பி செலுத்திய பிறகும் தடையின்மை சான்றை உடனடியாக வாங்குவது இல்லை. இதனால் மீண்டும் கடன் வாங்க செல்லும்போது அதை வாங்கும் நிலை இருக்கிறது. அவ்வாறு செல்லும்போது பணம் செலுத்தியதற்கான ரசீதை கேட்கிறார்கள். இதன் காரணமாக கடன் பெற தாமதம் ஏற்படு கிறது. எனவே அதில் உள்ள சிரமத்தை போக்க வேண்டும்.

ஷட்டர்கள் பழுது

விவசாயி ஆர்.தங்கவேலு:-

தொண்டாமுத்தூர் அருகே சித்திரைசாவடி வாய்க்காலில் மொத் தம் 43 ஷட்டர்கள் உள்ளன. இதில் 23, 24-வது ஷட்டர் பழுத டைந்து உள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டும். பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும், அன்னூரில் கொப்பரை தேங்காய் கொள்முதலை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். 

மேலும் செய்திகள்