வீடற்ற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 776 வீடுகள்

உளுந்தூர்பேட்டையில் வீடற்ற ஏழைகளுக்காக கட்டப்பட்ட 776 வீடுகள் விண்ணப்பபடிவம் நாளை வினியோகம்

Update: 2023-05-15 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 776 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடற்ற ஏழைகளுக்காக கட்டப்பட்ட இந்த வீடுகளை பயனாளிகளிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் வசிக்கக்கூடிய வீடற்ற, ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்கக்கூடியவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இதற்கான சிறப்பு முகாம் நாளை(புதன்கிழமை) மாலை 3 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் விண்ணப்பபடிவம் வினியோகம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை பெறுகின்றனர். எனவே வீடற்ற ஏழை, எளிய மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்