13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-02-29 22:57 IST

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா அணக்குடி தோட்டத்தெருவை சேர்ந்தவர் தங்கையன்(வயது 68). இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது 13 வயதான சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி தனியாக விளையாடி கொண்டிருந்ததை பார்த்த இவர், அந்த சிறுமியின் அருகே சென்றார். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வந்த சிறுமியை பார்த்த பெற்றோர் எதற்காக அழுகிறாய்? என கேட்டனர். அதற்கு அந்த சிறுமி நடந்த விவரத்தை தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் தங்கையனை கைது செய்தனர்.

பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜ் விசாரணை செய்து தங்கையனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்