பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-09-15 00:57 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் காலனி தெருவை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் பாக்கியலட்சுமி, அவரது கணவர் சத்யராஜ் ஆகியோர் கம்பி வேலி அமைத்தபோது அங்கு வந்த ரவி மற்றும் சிலர் பாக்கியலட்சுமியை திட்டி அவரது கணவர் சத்யராஜை கடப்பாரையால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மண்வெட்டியை காண்பித்து பாக்கியலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ரவி கொடுத்த புகாரின் பேரில் பாக்கியலட்சுமி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்