6 மாதங்கள் உல்லாசம்: இளம்பெண்ணின் காமவலையில் வீழ்ந்த மத்திய அரசு ஊழியர்... பரபரப்பு தகவல்

புரோக்கர் மூலம் தொடர்பு ஏற்பட்டு மத்திய அரசு ஊழியருக்கு இளம்பெண்ணிடம் திருமணம் கடந்த உறவாக மாறியது.

Update: 2024-05-22 14:55 GMT

சென்னை,

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 59) இவர் மத்திய அரசு அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சாலையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், இவருக்கும் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த திருமணமான பெண்ணான சுபாஷினி (40) என்பவருக்கும் புரோக்கர் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு நாளடைவில் திருமணம் கடந்த உறவாக மாறியது, பின்னர் இருவரும் கடந்த 6 மாதங்களாக தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு முறை சுபாஷனி காரைக்காலுக்கு செல்லும்போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி வெங்கடேசிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெற்று வந்துள்ளார். வேங்கடேசும் சுபாஷினியின் கண்ணீருக்கு பின்னால் குடும்ப வறுமை தானே உள்ளது என அவர் கேட்ட போதேல்லாம் பணம் கொடுத்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சுபாஷினி திட்டமிடுகிறார். அதன்படி கடந்த மாதம் 27-ம் தேதி எப்போதும் சந்திப்பது போன்று சுபாஷினி காரைக்காலுக்கு சென்றுள்ளார்.அப்போது வழக்கம் போல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி தனது "செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து, எதுவுமே  தெரியாதது போல் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர், கடந்த மாதம் (ஏப்ரல் ) 20-ந்தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரும் சுபாஷினியின் பேச்சை கேட்டு வந்துள்ளார். அதே வேளையில் சுபாஷினியோ, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரனி செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவரை விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் தனது கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்துள்ளார். பின்னர், சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை பிடிங்கியதுடன் ஆன்லைன் வாயிலாக ரூ.2.70 லட்சம் பணத்தையும் பறித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் நீ சுபாஷினியுடன் தனிமையில் இருந்த வீடியோ  எங்களிடம் உள்ளது. அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி வெங்கடேசனை அங்கிருந்து அனுப்பி உள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வெங்கடேசன் இதுகுறித்து நேற்று காலை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு சுபாஷினி, மூமுக மாநில இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் முகமது நசீர், தினேஷ் பாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூட்டாளிகள் 3 பேரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும் சுபாஷினியை திருவாரூர் சிறையிலும் அடைந்தனர்.

புரோக்கர் மூலம் திருமணமான பெண்ணுடன் பழகி, அவர் விரித்த காம வலையில் சிக்கி மத்திய அரசு ஊழியர் லட்சக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்