கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்க்கப்பட்டது.

Update: 2022-10-20 18:33 GMT

நச்சலூர் அருகே உள்ள மேல நந்தவன காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு இவருக்கு சொந்தமான கிணற்றில் 40 அடி ஆழத்தில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் தீயணைப்பு படைவீரர்களை பொதுமக்கள் ெவகுவாக பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்