கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42) இவர் திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி தாழக்குடி மசூதி தெருவை சேர்ந்த சோனி பார்த்தா என்கிற பார்த்திபன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.750 பறித்து சென்றான். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனி பார்த்தா என்ற பார்த்திபனை கைது செய்தனர்.