வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
கடையம் அருகே வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது.;
கடையம்:
கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இணையத்துல்லா. இவர் தனது வீட்டின் முன்பு பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் பின்பு கடனாநதி ஆறு ஓடுகிறது. இந்தநிலையில் வீட்டில் பின்புறம் உள்ள அறையில் பாம்பு ஒன்று புகுந்ததாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பாம்பு காணாமல் போனது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தேடிய போது அங்குள்ள குழாயில் நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. பல மணி நேரம் போராடி குழாயில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு சிவசைலம் பீட் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.