வெளிமாநில மதுபாட்டில்கள் விற்றவர் கைது
திருவண்ணாமலையில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருவண்ணாமலை கள்ளுகுட்டை தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பதும், வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.13 ஆயிரத்து 500 மதிப்புள்ள 75 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.