கை விலங்குடன் தப்பிய கைதி சிக்கினான்

நெல்லையில் கை விலங்குடன் தப்பிய கைதி சிக்கினான்.;

Update:2023-08-18 01:05 IST

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த பழனி முருகன் மகன் பரத் என்ற கார்த்திக் (வயது 19) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரது கையில் விலங்கு மாட்டி, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று அவர் மேலக்கரையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக அங்கு சென்று கார்த்திக்கை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்