மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update:2023-06-06 22:45 IST

திருவண்ணாமலை நகராட்சி செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி இன்று அங்கு கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இங்கு மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

சிகிச்சை மற்றும் மது போதை மீட்புக்காக 24 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் தேவையான படுக்கை வசதிகள் செய்து தரப்படும். இந்த மருத்துவமனையில் மனநல மருத்துவரின் மேற்பார்வையில் உள் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படும்.

இந்த மறுவாழ்வு மையத்தில் மன நல மருத்துவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாறு தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து வந்து சிகிச்சை அளிப்பார்கள்.

மேலும் இந்த மறுவாழ்வு மையம் காவல் துறையின் கண்காணிப்பில் செயல்படும் என்றார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மருத்துவ கல்லூரி டாக்டர் அரவிந்த், இணை இயக்குனர் நலப்பணிகள் பாபுஜீ, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்