நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் தற்கொலை

நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் தற்கொலை தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு.;

Update:2022-11-15 00:46 IST

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் லெனின் சங்கர், கூலி தொழிலாளி. இவருடைய மகன் மனோ நாராயணன் (வயது 20).

இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வில் மனோ நாராயணன் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் மனோ நாராயணன் தனது வீட்டில் தரையை துடைக்க பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்