ஓட்டல் சமையலறையில் திடீர் தீ விபத்து
விழுப்புரத்தில் ஓட்டல் சமையலறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று மாலை திடீரென சமையல் கூட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சமையல் கூட புகைபோக்கி பகுதியில் தீப்பிடித்து எரிந்து புகை மூட்டமாக காட்சியளித்தது. உடனே இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். உடனே தீயை அணைத்ததால் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.