மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-07-24 19:55 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 25). இவர் சம்பவத்தன்று மஞ்சம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்