திருட்டு பொருட்களை வாங்கிய வாலிபர் கைது

ராமநத்தம் அருகே திருட்டு பொருட்களை வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-23 20:04 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரில் அய்யனார் கோவில் மற்றும் செல்லியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் இருந்த கோபுர கலசம் மற்றும் உண்டியலை சம்பவத்தன்று மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே கோவிலில் திருடிய மர்மநபர்களிடம் இருந்து கோவில் மணி மற்றும் கலசங்கள் வாங்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அருண்பிரகாஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்