சாலையை கடந்து சென்ற புலி

ஊட்டி அருகே சாலையை கடந்து சென்ற புலியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. . இந்தநிலையில் ஊட்டியில் இருந்து சோலூருக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சத்யா நகர் பகுதியில் தேயிலை தோட்டம் பகுதியில் புலி ஒன்று சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்வதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சுற்றுலா பயணிகள் காரை நிறுத்திவிட்டு, அமைதியாக புலியின் செயல்பாட்டை பார்வையிட்டனர்.

சாலையோர புல்வெளியில் புலி படுத்து கிடந்து ஓய்வெடுத்தது. தொடர்ந்து புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் அந்த புலி சாலையை கடந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்று, சுற்றுலா பயணிகளை திரும்பி பார்த்தது. தொடர்ந்து இறை தேடி மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்