கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

வாணியம்பாடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.;

Update:2023-08-28 00:13 IST

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 55). இவர் வாணியம்பாடி கோட்டை பகுதியில் மோகன்குமார் என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள 40 அடி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கிணற்றில் விழுந்த புஷ்பாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்