ஆழியாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆழியாறு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது;
ஆழியாறு
பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக ஆழியாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோட்டூர் சங்கம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 27) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.