மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மேல்பாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.;

Update:2022-06-12 20:00 IST

திருவலம்

திருவலம் அருகே உள்ள தேம்பள்ளியை அடுத்த சிவானூர் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 22). இவர் திருவலம் பகுதியிலிருந்து மேல்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மேல்பாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது, நவீன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நவீன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்