வாலிபரிடம் ரூ.2 ஆயிரம் வழிப்பறி

வாலிபரிடம் ரூ.2 ஆயிரம் வழிப்பறி செய்த இருவரை போலீசாா் தேடிவருகின்றனா்.;

Update:2023-08-23 00:15 IST


திண்டிவனம், 

திண்டிவனம் அருகே தென்பசார் அடுத்த அவனம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அஜித் குமார் (வயது 24). இவர், சம்பவத்தன்று இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கர்ணாவூர் பேட்டை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 பேர் லிப்ட் கேட்டு வழிமறித்தனர். இதை பார்த்த அஜித்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அவர்கள் அஜித்குமாரை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்