"எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை" சபாநாயகர் அப்பாவு பேட்டி

“எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை” சபாநாயகர் அப்பாவு பேட்டி.;

Update:2022-07-20 02:15 IST

நெல்லை,

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வேலுமணி ஒரு கடிதத்தை எனது உதவியாளரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அது என்னிடம் பரிசீலனையில் உள்ளது. எனவே, தற்போது அ.தி.மு.க. கொறடா கொடுத்த கடிதத்தை படித்து பார்த்து பரிசீலனை செய்வேன். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி ஒருதலைப்பட்சமின்றி சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன். எனக்கு யார் மீதும் எந்த வெறுப்பும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்