உடன்குடியில் அதிக உறுப்பினர்களை சேர்த்ததி.மு.க. நிர்வாகிகளுக்கு தங்க நாணயம் பரிசு

உடன்குடியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.;

Update:2023-09-05 00:15 IST

உடன்குடி:

உடன்குடியில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் உத்திரவின் பேரில் நகர தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்தது. இதில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு தங்கநாணயம் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கும் விழா உடன்குடியில் நடந்தது. விழாவிற்கு நகர செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஷ் தலைமை வகித்து, அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு தங்க நாணயம் மற்றும் பரிசுகள் வழங்கினார். ஒன்றிய அவைத்லைவர் ஷேக்முகமது, நகர அவைத்தலைவர் அப்துல்ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்