ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம்

ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-02 01:00 IST

கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்ேகாரி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குத்தாலம் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மகாகணபதி மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அபுதாகிர் வரவேற்றார். இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் கலந்து கொண்டு பேசினார். இதில் சீர்காழி நகர செயலாளர் அருண், வக்கீல் செல்வி மற்றும் ஓ.பி.எஸ். அணியினர், அ.ம.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. நகர செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்