அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

சங்கரன்கோவிலில் அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update:2023-09-16 02:33 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ், மகாராஜன், நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்