வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

சுல்தான்பேட்டை அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-02-01 18:45 GMT

சுல்தான்பேட்டை, 

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட போகம்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வருவாய் துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பட்டா மாறுதல், சிறு, குறு விவசாய சான்று வழங்குதல் மற்றும் வேளாண்மை துறை மூலம் தார்பாலின் வேளாண் எந்திரங்கள் வழங்குதல், தென்னங்கன்று நெட்டை ரகம் இலவசமாக வழங்குதல் போன்ற விபரங்கள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றனர். இதில் கால்நடை டாக்டர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் குமார், தோட்டக்கலைத்துறை அலுவலர் தியாகராஜன், உதவி வேளாண் அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்