மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.;
பெண்ணாடம்,
பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த மெய்யழகன் மகன் ஜெயக்குமார் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.