3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு உத்தரவு
3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு உத்தரவு.;
சென்னை,
தமிழகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 525 நூலகங்கள் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் கடந்த ஆண்டு சட்டசபையில் வெளியிட்டார்.
முதல் கட்டமாக 2021-22-ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும்.
மேற்கூறிய தகவல் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.