திருமங்கலத்தில் அம்மா உணவக ஊழியர்கள் சம்பளம் கோரி போராட்டம்
திருமங்கலத்தில் அம்மா உணவக ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம் நடத்தினர்.;
திருமங்கலம்
திருமங்கலத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரே அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று அம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் நகராட்சி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.