மாவட்டத்தில் கால்நடை தீவன ஆய்வுக்கூடம் அமைக்க மானியம்-கலெக்டர் தகவல்

Update: 2022-09-23 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கால்நடை பராமரிப்பு துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், இறைச்சி பதப்படுத்துதல், தீவன உற்பத்தி ஆலைகளை நிறுவுதல், கால்நடை இனவிருத்தி தொழில்நுட்பம், கால்நடை பெருக்க பண்ணைகள் அமைத்தல், கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், மருந்துகள் தயாரித்தல், தாது உப்புகள் தயாரித்தல் மற்றும் கால்நடை தீவன ஆய்வு கூடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், விவசாய உற்பத்தி குழுக்கள், பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வங்கி கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இந்திய அரசின், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களை பெற கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்