அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு

அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவனர் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-05-29 15:58 IST

தனியார் நிறுவன ஊழியர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 53). இவர் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். மேலும் இவர் குடிப்பழக்கம் கொண்டவர் ஆவார். கடந்த 24-ந்தேதியன்று வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அளவுக்கு அதிகமாக

பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றில் அமர்ந்து அவர் மது குடித்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

இது் குறித்து சதீஷ்குமாரின் மகன் தினேஷ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்