கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2023-09-21 02:54 IST

எடப்பாடி:

என்ஜினீயரிங் மாணவர்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கோணங்கியூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் குணால் (வயது 21). இவர், திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் நேற்று முன்தினம் மாலை கச்சுப்பள்ளியை அடுத்த எட்டிகுட்டை மேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.

கல்லூரி வளாகத்தில் பிணம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை எடப்பாடி அருகே எட்டி குட்டைமேடு அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிட மேற்கூரையின் கம்பியில் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குணால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குணால் மேற்கூரை கம்பியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்