காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலை பகுதியில் தர்மபுரி அடுத்த மூலகாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரை (வயது 75). இவர், அப்பகுதியில் அங்கிருந்து கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வீரமலை பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத நிலையில் குட்டையில் முதியவர் பிணம் மிதந்தது. இதை பார்த்தவர்கள் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சக்கரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.