அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கயத்தாறு பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2023-06-18 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சுதா லட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சபுரா சலீமா முன்னிலை வகித்தார். கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிககளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் உறுதுணையாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, உடற்கல்வி ஆசிரியர்கள் ரவீந்திரன், சுரேஷ், வார்டு கவுன்சிலர் நயினார் பாண்டியன், வடக்கு சுப்பிரமணியபுரம் மணிகண்டன், தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன், ஜெனி உள்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு மற்றும் கேடயம், ரூ.2 ஆயிரம், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ.1,500, 3-வது மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 1000 ரூபாயும் பேரூராட்சி தலைவர் தனது சொந்த பொறுப்பில் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்