அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தீ விபத்து - பயணிகள் அதிர்ச்சி...!

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-06-21 21:51 IST

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதச்சாரிகள் மேம்பாலத்துல் தீ விபத்து ஏற்பட்டது.

மேம்பாலத்தில் உள்ள மின்விளக்கில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் அச்சத்துடன் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கினர்.

தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரக்கோணம் தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன் தீ மேலும் பரவாமல் பார்த்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்