பாலக்கோடு:
பாலக்கோடு போலீசார் பஸ் நிலையம், முருகன் கோயில் தெரு, எம்.ஜி, ரோடு, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற மேல் தெருவைசேர்ந்த சக்தி (வயது45), திருமல்வாடி ராஜ்குமார் (30), நக்கல்பட்டி விஜயகுமார் (31), அகராகரத்தெருவை சேர்ந்த அருளானந்தம் (27) சுகர்மில் ஞானசேகர் (27), நந்தகுமார் (23), கணபதி (32) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.