பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (வயது 50). இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 51 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (47) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.