மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Update:2023-08-14 01:00 IST

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள ராணிமூக்கனூர் மோட்டூரை சேர்ந்தவர் பழனி(வயது 53). விவசாயி. இவர் சம்பவத்தன்று சிந்தல்பாடியில் இருந்து மோட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிந்தல்பாடி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு பழனி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து மொரப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கம்பைநல்லூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்