பென்னாகரம் அருகே கோவில் திருவிழாவில் தகராறு; 4 பேர் கைது

Update:2023-08-16 01:00 IST

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி பிரதாப் (வயது 30), அன்பரசு(20), விக்னேஷ் (19), சசிகுமார் (21) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வின்னேஷ் தரப்பினர் பிரதாப்பை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்