பாலக்கோடுதொழிலாளியிடம் பணம் பறித்த பிக்பாக்கெட் திருடன் கைது

Update:2023-08-30 01:00 IST

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது41). கூலித்தொழிலாளி. இவர் பாலக்கோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் திடீரென முருகனின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர் திருப்பத்தூர் தென்றல் நகரை சேர்ந்த ராஜகண்ணன் (46) என்பதும் பிக் பாக்கெட் திருடன் என்பதும் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்