தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது

எருமப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவைரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-25 00:15 IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர். சின்னசாமி மகன் தினேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் தீபக் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் மற்றும் அவரது நண்பர் பவித்திரத்தை சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கினர். இதுகுறித்து தினேஷ் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர். இந்தநிலையில் தலைமறைவாகி வந்த அஜித்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்