மது விற்றவர் கைது

வெண்ணந்தூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-02-06 00:40 IST

வெண்ணந்தூர்

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுபான கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது. இந்தநிலையில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெண்ணந்தூர் அடுத்த மாமூண்டி அருகே உள்ள சவுரிபாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்த மாயகிருஷ்ணன் (வயது 42) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்