ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சந்தோஷ் (வயது 26). இவர் ராசிபுரம் டவுன் காட்டூர் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்ேதாசை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்.