காவேரிப்பட்டணம் அருகேஇருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது

Update:2023-04-25 00:30 IST

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஊர் கவுண்டராக முத்துசாமி (வயது 40) என்பவர் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (44). இந்த நிலையில் முத்துசாமி ஊர் கவுண்டராக இருந்தபோது கோவில் நிலங்கள், ஏரி ஏலம் விடுவதில் முறைகேடு செய்ததாகவும், அவர் ஊர் கவுண்டராக தொடர கூடாது எனக்கூறி நேற்று முன்தினம் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய போத்தாபுரத்தில் சின்னசாமி தலைமையில் சாலை மறியல் நடந்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் சின்னசாமி, முத்துசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்