கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் திருடிய ஜோதிடர் கைது

Update:2023-04-27 00:30 IST

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள புதுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் அன்புமணி (வயது 49). இவர் கடத்தூர் பஸ் நிலையத்தில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளை தனது வீட்டில் நிறுத்தி விட்டு கடைக்கு வந்து விட்டார். அப்போது யாரும் இல்லாதபோது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை யாரோ ஒருவர் ஓட்டி செல்வதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அன்புமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது மைத்துனரான கார்த்தியிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் அவர் விரைந்து சென்று பார்த்தபோது கடத்தூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாலிபர் திருடி சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருந்தார் அப்போது அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் அவர் கம்பைநல்லூர் அருகே உள்ள செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் (44) என்பதும் இவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. அவரை கடத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நேரு வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய முருகனை கைது செய்து மோட்டார் சைக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்