கஞ்சா, குட்கா விற்ற 2 பேர் கைது
பேரிகை பகுதியில் கஞ்சா, குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஓசூர்,
பேரிகை போலீசார் ராமன்தொட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த புஜ்ஜப்பா (வயது75) என்பவரை கைது செய்தனர். இதே போல ஒன்னல்வாடியில் குட்கா விற்ற நவீன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.